2026 ஜனவரி முதல் புதிதாக இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து இரண்டு சக்கர வாகனங்களிலும் ஏவிஎஸ் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது தற்போது சுமார் 40% இருசக்கர வாகனங்களில் இந்த வசதியானது இல்லை. இந்த தொழில்நுட்பம் இருந்தால் திடீரென்று பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் லாக் ஆவது தவிர்க்கப்படும். இதனால் விபத்துக்கள் குறையும். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது.
தற்போது 125சிசிக்கு மேல் இருக்கும் வாகனங்களில் மட்டுமே ஏபிஎஸ் வசதி கட்டாயமாக இருக்கிறது. தற்போது இரு சக்கர வாகனம் வாங்கும்போது ஒரு ஹெல்மெட் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஜனவரி 2026 முதல் இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட இருக்கிறது. வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் இருந்து பயணிப்பவர் ஆகிய இருவருமே ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்த விதிமுறையை முழுமையாக பின்பற்றுவது உறுதி செய்வதற்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…