14 மாநில முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்…. எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீது 4,000+ வழக்குகள்… CM விஜய்க்கு எந்த இடம்?…. வெளியான பகீர் உச்சநீதிமன்ற அறிக்கை…!

Spread the love

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 14 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜூலை 2026 நிலவரப்படி, பதவியில் இருக்கும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மொத்தம் 4,192 குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில் உத்தரப் பிரதேசம் 1,171 வழக்குகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதிக அளவிலான குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் முதலமைச்சர்கள் பட்டியலில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி 89 கடுமையான வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து மேற்குவங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி 29 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது தலா 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் 18 வழக்குகளையும், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஐந்து வழக்குகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் ஆகியோர் மீது தலா நான்கு வழக்குகள் உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி ஆகியோர் மீது தலா இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சிக்கிம் முதலமைச்சர் பி.எஸ். தமாங், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா ஆகியோர் மீது தலா ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. மாநிலங்கள் வாரியாகப் பார்க்கும்போது, மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்களில் 58 சதவீதத்தினர் (292 பேரில் 170 பேர்) கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டு முதலிடத்தில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கேரளா (57%), ஆந்திரப் பிரதேசம் (56%), தெலங்கானா (49%), ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா (தலா 45%), பீகார் (42%) மற்றும் மகாராஷ்டிரா (40%) ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் கணிசமான அளவில் குற்ற வழக்குகளைக் கொண்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களில் 170 பேர் (31%) மீது கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநிலங்களவையைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 233 உறுப்பினர்களில் 75 பேர் (33%) குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதில் 40 உறுப்பினர்கள் (18%) கடுமையான குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

Nanthini

Recent Posts

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

9 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

12 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

22 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

30 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

30 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

39 minutes ago