ராமநாதபுரத்தில் நள்ளிரவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கீழக்கரை அருகே ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் எதிரே வந்த கார் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் சமீபகாலமாக அடுத்தடுத்து விபத்து நிகழ்வது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
