BREAKING: கொளத்தூர் தொகுதி வழக்கில் அதிரடி முடிவெடுத்த திமுக…. டெல்லிக்கு மாறும் பஞ்சாயத்து…. ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்….!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைக் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திமுக முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாகப் பேசிய திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, தேர்தல் ஆணையம் பரிசோதித்த 19 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 14 மட்டுமே சரியாக இயங்குவதாகத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் மீதமுள்ள 5 இயந்திரங்கள் பழுதடைந்து, ஒட்டுமொத்தமாக 33 சதவீதக் குறைபாடு இருப்பது உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இப் பிரச்சினையில் இறுதி வரை சட்டப் போராட்டம் நடத்தி நிச்சயம் வெற்றி காண்போம் என்றும் தீவிரமாகத் தெரிவித்தார்.