ஊழல் எதிர்ப்பு மற்றும் தூய சக்தி என்ற முழக்கங்களுடன் அரசியல் களத்தில் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம், தற்போது தனது தொடக்க கால பலத்தை இழந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கட்சியில் இணைந்தாலும் தங்களது முந்தைய குற்ற வழக்குகளை சட்டப்படியே சந்திக்க வேண்டும் என்று தவெகவின் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம் அளித்திருந்தாலும், குட்கா மற்றும் சொத்துக்குவிப்பு போன்ற தீவிர ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை கட்சியில் இணைப்பது தவெகவின் அடிப்படை கொள்கைக்கே முரணானது என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது.
கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது போன்ற இத்தகைய நடவடிக்கைகள், மாற்று அரசியலை நோக்கி நகரும் என்று தமிழக முதல்வர் விஜய் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் நன்மதிப்பையும் கணிசமாகக் குறைத்து, கட்சியின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.
