தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத், சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டே தனது மொபைல் போன் திரையின் மீது ஏதோ ஒரு பொருளைப் பொடியாக்குவது போன்ற வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவியது. முதலமைச்சர் விஜய் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட அதே வேளையில், அவரது அமைச்சரவை சகாவான சரத் போதைப்பொருள் பயன்படுத்துவது போல் வெளியான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அமைச்சர் சரத் தற்போது அந்த வீடியோ குறித்த தனது விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறுகையில், “அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஆகும். அப்போது எனது குழந்தைக்கு ஒன்றரை வயது தான் ஆகியிருந்தது; குழந்தைக்கு உடம்பும் சரியில்லை அவசரத்திற்காக குழந்தையின் மாத்திரையைத் தான் மொபைல் திரையில் வைத்துப் பொடியாக்கி, தண்ணீரில் கலந்து கொடுப்பதற்காக அப்படிச் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கும் ஒரு பொது இடமான கிரிக்கெட் மைதானத்தில், அத்தனை கேமராக்களுக்கு முன்பாக யாராவது போதைப்பொருளைப் பயன்படுத்த துணிவார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசியல் காரணங்களுக்காகவும் தனிப்பட்ட நற்பெயரைக் கெடுப்பதற்காகவும் சிலர் திட்டமிட்டு அந்த வீடியோவை தவறாகச் சித்தரித்து வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்றும் தனது விளக்கத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…