விஜய் அரசுக்கு வந்த அடுத்த தலைவலி… “வேலை தருவதாக ஆசைவார்த்தை… காரில் நடந்த கொடூரம்… தமிழகத்தையே உலுக்கிய தவெக பிரமுகரின் கொடூர செயல்…!

Spread the love

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இத்தகைய கொடூரமான குற்றங்களைத் தடுக்க பல்வேறு கடுமையான சட்டங்களையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வந்தபோதிலும், சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன. இந்தச் சூழலில், அண்மையில் புதிய அரசை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் அடுத்தடுத்து குடைச்சலைத் தரும் வகையில் அமைந்துள்ளன.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு “நல்ல வேலை வாங்கித் தருவதாக” ஆசை வார்த்தைகள் கூறி, தவெக நிர்வாகிகள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக எழுந்துள்ள புகார் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. காரில் வேலை விஷயமாக அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணிற்கு, ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடி பகுதியின் தனியார் விடுதியில் வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. பெண் மயங்கிய நிலையைப் பயன்படுத்தி, தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் அவரது நண்பரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய இருவரும் கூட்டுப் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் மயக்கம் தெளிந்ததும் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் அளித்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் அதிரடி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளான பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தவெக நிர்வாகிகள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலைய பெண் காவலர் ஒருவருக்கு இன்ஸ்பெக்டரே பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். “பெண்களைக் காக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை” என எதிர்க்கட்சிகள் தவெக அரசை கடுமையாகச் சாடி வரும் நிலையில், தற்போது அக்கட்சியின் முக்கிய மாவட்ட நிர்வாகியே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றிருப்பது புதிய அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் அதிர்வலைகளையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

7 மணத்தியாலங்கள் ago