கல்லூரி சுற்றறிக்கை விவகாரத்தைத் தொடர்ந்து, “அதிகாரிகள் வேண்டுமா அல்லது ஆதரவு தந்த நாங்கள் வேண்டுமா?” என்று சிபிஎம் (CPM) மூத்த தலைவர் சண்முகம் கேள்வி எழுப்பியதும், அதனைச் சுட்டிக்காட்டி தோழமை கட்சிகளுடன் உறவு பாதிக்கப்படக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளதும், ஆளுங்கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
நிர்வாகக் கொள்கை முடிவுகளில் அரசு அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கும், அதற்கு அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தும் பகிரங்க எதிர்ப்பும் கூட்டணிக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்து வருவதை உணர்த்துகின்றன. தேர்தல் அணுகிவரும் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியைப் புறக்கணிப்பது வாக்கு வங்கியிலும் தொகுதிப் பங்கீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முதல்வர் உடனடியாகத் தலையிட்டு அரசிற்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இடையே நிலவும் இந்த மோதல் போக்கைச் சீர் செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.
