“விஜய் தான் உண்மையான தளபதி, மற்றவர்கள் வெட்டி தளபதி”…. ஒரே போடாய் போட்ட KAS…..!

By Nanthini on மார்கழி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்த பிறகு நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அதே சமயம் மாற்று கட்சியினர் பலரும் விஜய் கட்சியில் தொடர்ந்து இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் வெல்லும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பேசிய அவர், பல விவகாரங்களுக்கு விஜய் வாய் திறப்பதில்லை என சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் நேரம் வரும்போது அவர் பேசுவார் என குறிப்பிட்டார். படைக்கு தலைமை வகிப்பவர், வென்று நாட்டை ஆள்பவரே தளபதி என்று கூறிய அவர், விஜய் தான் உண்மையான தளபதி எனவும் மற்றவர்கள் எல்லாம் வெற்றி தளபதி எனவும் விமர்சித்துள்ளார்.