இந்தோனேசியாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு ஒன்றில், மணமகன் தனது புது மனைவியுடன் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணமகனின் முன்னாள் காதலி, மணமகளின் முன்னிலையிலேயே மணமகனின் கையைப் பிடித்து முத்தமிட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மணமகள், சற்றும் யோசிக்காமல் அந்தப் பெண்ணின் முடியைப் பிடித்து கீழே தள்ள முயன்றது அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
🚨⚡️During a wedding in Indonesia, the groom’s ex-girlfriend went up to the podium during the photo session and tried to kiss his hand in front of the bride.
The bride’s reaction was immediate. pic.twitter.com/1yo6RArbwO
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) December 26, 2025
திருமண மேடையிலேயே அரங்கேறிய இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், முன்னாள் காதலியின் செயலை “அநாகரிகமானது” என்றும், தனது கணவரை தற்காத்துக் கொண்ட மணமகளின் செயலை “துணிச்சலானது” என்றும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
