தமிழக வெற்றி கழகம் கட்சியில் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. விஜய் பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறாரோ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் நிகழ்ச்சிக்காக பட்டுக்கோட்டைக்கு வந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி என கூறுகிறார். இது விந்தையிலும் விந்தையான விஷயம்.
ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. ஆதவ் அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைக்கிறாரோ என்பது தெரியவில்லை. ஒரு கவுன்சிலர் கூட அங்கு இல்லை. தேர்தல் வருவதால் கூட்டத்தைக் கூட்டி விடலாம். ஆனால் ஆட்சிக்கு வர வேண்டும், மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும், எம்எல்ஏக்கள் வரவேண்டும். பாஜகவில் மொத்தம் 300 எம்பிக்கள் 1200 எம்எல்ஏக்கள் உள்ளனர். உலகத்திலேயே ஒரு மிகப்பெரிய கட்சி பாஜக. ஆனால் அந்த கட்சி என்று இரு கையையும் விரித்தனர். பாஜக யாரையும் எதிர்காது என்று பேசியுள்ளார்.
