இறாலின் பின்புறத்தில் இருக்கும் கருப்பு நிற நரம்பு…. எடுக்காமல் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

இறாலின் பின்புறத்தில் கருப்பு நிறத்தில் ஒரு கோடு போல இருக்கும் அதை அகற்றி தான் சாப்பிடுவது வழக்கம். இந்த கருப்பு நிற கோட்டை எடுக்க விட்டால் ஏதேனும் உடல்நல ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்து பார்க்கலாம். இந்த கருப்பு நிற நரம்பு இறாலின் செரிமான பகுதி. இதில் கழிவுகள் அல்லது நச்சுக்கள் இருக்கலாம். இதை அப்படியே எடுக்காமல் சாப்பிட்டால் மணல் தன்மை மற்றும் கசப்பான சுவையைக் கொடுக்கும். இது ஒட்டுமொத்த சுவையும் பாதிக்கும்.

நம்முடைய செரிமான அமைப்பில் நுழையும் இந்த கழிவுகள் சிலருக்கு உணர்ந்துடன் வாய்ந்த செரிமானம் அல்லது மீன் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு செரிமான பிரச்சினை ஏற்படுத்தும் .இதனால் முதலில் இறாலில் தலை மற்றும் கால்களை அகற்றிவி இறாலில் பின்புறத்தில் லேசாக வெட்டி அந்த கருப்பு நரம்புகளை மெதுவாக மேலே எடுக்க வேண்டும். பிறகு தண்ணீரில் அலசி சமைக்க வேண்டும்.