மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்கும் விஜய்… இடத்தை இறுதி செய்த TVK… இனிதான் ஆட்டமே ஆரம்பம்…!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு பல சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார். தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் சட்ட ரீதியாக அனைத்தையும் கையாண்டு வரும் விஜய் தனது கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றார். இதனிடையே விஜய் மீண்டும் எப்போது தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் சேலத்தில் இருந்து விஜய் தனது பரப்புரையை மீண்டும் தொடங்க உள்ளார். வருகின்ற டிசம்ப 4 ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுத்த நிலையில் மாற்று தேதியை இறுதி செய்யும் பணியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதனிடையே சேலம் சீலநாயக்கன்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தை பரப்புரைக்கு இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அசம்பாவிதத்தை அடுத்து பாதுகாப்புடன் பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.