10-வது மாடியில் இருந்து கடல் வியூ… ஜோதிடர் சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை…. அதிரடியில் இறங்கிய முதல்வர் விஜய்…. கோட்டையில் நடக்கும் அதிரடி மாற்றம்….!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

தமிழக முதல்வர் விஜய் தனது தலைமைச் செயலக அலுவலகத்தை வாஸ்து காரணங்களுக்காக மாற்றவிருப்பதாக கோட்டை வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது. தற்போது தலைமைச் செயலகத்தின் இரண்டாவது மாடியில் முதல்வரின் அறை, அவரது அலுவலகம் மற்றும் 4 செயலாளர்களின் அறைகள் இயங்கி வருகின்றன. இதில் முதல்வர் விஜய் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து பணியாற்றி வரும் நிலையில், இந்த திசையமைப்பும் தற்போதைய அலுவலகமும் வாஸ்து முறைப்படி சரியாக அமையவில்லை என்று அவருடைய ஜோதிடர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜோதிடரின் இந்த அறிவுரையைத் தொடர்ந்தே, தனது அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் யோசனையில் முதல்வர் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

இந்த சூழலில், தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்கு மாளிகையான ‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ முதல்வரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மாளிகையின் 10-வது மாடியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் கலெக்டர்கள் மாநாடு போன்ற முக்கிய நிகழ்வுகள் நடக்கும் பிரம்மாண்டமான மாநாட்டு அரங்கம் உள்ளது. அண்மையில் அங்கு நடைபெற்ற கலெக்டர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் விஜய், அந்த மாடியிலிருந்து பரந்து விரிந்து கிடக்கும் வங்காள விரிகுடா கடலின் ரம்மியமான காட்சியைக் கண்டு வியந்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தைப் பற்றி தனது ஜோதிடரிடம் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

   

அரசாங்கத்தின் உச்ச பதவியில் இருக்கும் நீங்கள், ஆட்சி புரியும் இடத்தின் உச்சத்தில் (10-வது மாடியில்) அமர்ந்து செயலாற்றும்போது அனைத்தும் ஆரோக்கியமாக அமையும் என்றும், அரசியலில் இன்னும் பல உச்சங்களை நீங்கள் தொடுவீர்கள் என்றும் ஜோதிடர் பச்சைக்கொடி காட்டியுள்ளார். ஜோதிடரின் இந்த பாசிட்டிவ் கணிப்பைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த மாற்றத்திற்கு அதிகாரிகளும் தங்களின் ஒப்புதலை வழங்கியதை அடுத்து, முதல்வரின் ஒட்டுமொத்த அலுவலகத்தையும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, முதல்வர் விஜய்யின் தனி அறை, முதல்வரின் செயலகம் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகள், அத்துடன் ஒரு மினி கான்ஃபரன்ஸ் ஹால் ஆகியவற்றை 10-வது மாடியில் உருவாக்குவதற்கான பணிகள் தற்போது அதிவேகமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் இந்த நவீன கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் முடிந்தவுடன், புதிய பொலிவுடன் தயாராகும் 10-வது மாடிக்கு முதல்வரின் அலுவலகம் ஒட்டுமொத்தமாக இடம் பெயரவுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் உச்சியிலிருந்தே முதல்வர் விஜய் தனது புதிய அரசியல் நகர்வுகளையும் ஆட்சியையும் தொடங்குவார் எனத் தெரிகிறது.