ஆயுர்வேத கிளினிக்கிற்குள் நடந்த ஆபாச வேலை… மூன்று இளம் பெண்களின் கைவரிசை… “மசாஜ் சென்டர்” என்ற பெயரில் பாலியல் தொழில்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!

By Visaka on ஆடி 17, 2026

Spread the love

பொள்ளாச்சி பல்லடம் சாலையில் இயங்கி வந்த போலி ஆயுர்வேத சிகிச்சை மையத்தில், காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பாலியல் தொழில் கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அனீஸ் மற்றும் அவருடன் இருந்த ஒரு இளம்பெண் ஆகிய இருவரும் இணைந்து, ‘கேரளியம் ஆயுர்வேதிக் பிசியோதெரபி’ என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகக் கூறி, ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியோடு இந்த கிளினிக் செயல்பட்டு வந்ததால் பொதுமக்கள் இதனை ஒரு உண்மையான சிகிச்சை மையம் என்றே நம்பியுள்ளனர்.

இருப்பினும், இந்த மையத்தில் பெண்களை வைத்து சட்டவிரோதமாகப் பாலியல் தொழில் நடப்பதாகப் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், இன்று காவல்துறையினர் வாடிக்கையாளர்களைப் போல மாறுவேடத்தில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு பிசியோதெரபி என்ற பெயரில் சென்னை, சேலம் மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கள்ளத்தனமாக அரங்கேறி வந்தது உறுதி செய்யப்பட்டது.

   

இதனையடுத்து, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று இளம் பெண்களை மீட்ட போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஒருவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்; மற்ற இரு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சட்டவிரோத கும்பலின் பின்னணியில் உள்ள கிளினிக் உரிமையாளர் அனீஸை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மருத்துவ சிகிச்சை அளிக்கும் போர்வையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஆன்லைன் முன்பதிவு வசதியுடன் அரங்கேறி வந்த இந்த மோசடிச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.