தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற இபிஎஸ் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு பாஜக உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தமிழக மக்களுக்கு விடியலை தர வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சிந்தித்து செயலாற்றி வருகின்றார். அதேசமயம் தொடர்ந்து பாஜக மற்றும் திமுக அரசை விஜய் விமர்சித்து வருகின்றார்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களை இணைக்கும் வகையில் MY TVK என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. நொடிக்கு 18000 பேர் இணையும் வசதியுள்ள இந்த செயலியில் தற்போது வரை சுமார் மூன்று லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், இளைஞர்கள் என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் இந்த வேகம் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
