விஜய் அடுத்த அதிரடி முடிவு… கலக்கத்தில் அதிமுக, திமுக.. அடுத்த வாரம் முதல் ஆட்டம் ஆரம்பம்…!

By Nanthini on ஆடி 12, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பாக்கம் ஈபிஎஸ் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார். இவர்கள் இருவருக்கும் போட்டியாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். தமிழகத்திற்கு புதிய ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இப்படியான நிலையில் தமிழக வெற்றிக்கலகம் தலைவர் விஜய் ஹைடெக் “வார் ரூம்” மூலம் சோசியல் மீடியா பரப்புரையை தீவிரப்படுத்த உள்ளார். வரும் ஜூலை 13ஆம் தேதி திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தும் விஜய், அன்றைய தினமே உறுப்பினர் செயற்கைக்காக தனியாக செயலி ஒன்றை அறிமுகம் செய்கின்றார். தேனாம்பேட்டையில் வார் ரூம் தொடங்க விழா நடந்து முடிந்த நிலையில் அடுத்த வாரம் முதல் ஆட்டம் ஆரம்பிக்கிறது.