BREAKING: அடுத்த அதிரடி… தீபாவளி முடிந்ததும்… விஜய் எடுத்த முக்கிய முடிவு…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே போட்டியாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் விஜய் கவனம் செலுத்தி வருகின்றார்.

அதேசமயம் சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவியை வங்கி கணக்கில் செலுத்தி இருந்தார். இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார். அதற்கான பணிகளை தீவிர படுத்த தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளி முடிந்ததும் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தே விஜய் ஆறுதல் தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றன. இதனைத் தொடர்ந்து அவரது பரப்புரை தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

தளபதியின் அமைச்சரவை பட்டியல் ரெடி… புஸ்ஸி ஆனந்த் முதல் செங்கோட்டையன் வரை.. யார் யாருக்கு என்ன பதவி..?

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் அமையப்போகும் புதிய அமைச்சரவையில் யார்…

3 minutes ago

“இவனுகளை சும்மா விடாதீங்க” ஓடும் ரயிலில் இருக்கைகளை கிழித்து அட்டூழியம்.. ரயில்வே உங்க அப்பா வீட்டு சொத்தா.? கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற நோக்கில், ஓடும் ரயிலில் பயணம் செய்த சில இளைஞர்கள் ரயிலின் இருக்கை உறைகளை…

6 minutes ago

“கைக்கு எட்டினது வாய்க்கு எட்டல” விஜய்க்குச் செக் வைத்த மக்கள்… தவெக-விற்குத் திருமாவளவன் கொடுத்த ஷாக்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். விசிக…

7 minutes ago

“விஜய் அழைத்தால் தயார்” கூட்டணி ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா கம்யூனிஸ்டு கட்சிகள்…? தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு…

14 minutes ago

BREAKING: சற்றுமுன் அதிகாரபூர்வமாக நீக்கினார் ஸ்டாலின்… தமிழக அரசியலில் அடுத்த அதிரடி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…

20 minutes ago

நீட் தேர்வு மையத்தில் பரபரப்பு..! மகளிடம் அதை கழற்றச் சொன்ன அதிகாரிகள் .. ஆவேசமடைந்த தந்தை.. வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் சூரத்தின் அம்ரோலி பகுதியில் உள்ள நீட் தேர்வு மையத்தில், மாணவி ஒருவர் தனது கழுத்தில் அணிந்திருந்த புனிதமான…

21 minutes ago