. 50 வருடத்திற்கு மேலாக அதிமுகவில் பயணித்த செங்கோட்டையன் அரசியலில் ஆழ அகலத்தை நன்கு அறிந்தவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் விரக்தியில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் நேற்று இணைந்தார். செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை விஜய் கொடுத்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களமே மாறியுள்ளது மட்டுமின்றி பரபரப்பாகவும் இருக்கிறது. இந்நிலையில் புதுச்சேரியில் INDIA கூட்டணி வாக்குகளை விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், NDA தற்போது கூட்டணி பிரிந்து கிடப்பதால், அந்த வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். நேற்று விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் இணைந்த கையேடு புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதனும் தவெகவில் இணைந்தார். மேலும் டிசம்பரில், புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
