தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த நான்காம் தேதி முதல் வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பல இடங்களிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இடம்பெறாது என்ற தகவலை ECI விளக்கியுள்ளது. அதன்படி டிச.4-ம் தேதிக்குள் SIR விண்ணப்ப படிவத்தை ஒப்படைக்காத நபர்களின் பெயரும், மூன்றி முறை வீட்டுக்கு சென்றும் படிவத்தை கொடுக்காதவர்கள் பெயரும் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்துள்ளது. அவர்கள் டிச.9 முதல் ஜன.8 வரை விண்ணப்பம் 6 உடன் உறுதிமொழிப் படிவத்தை கொடுத்து புதிதாக விண்ணப்பிக்கலாம். அந்த வாய்ப்பையும் தவறவிட்டால் ஓட்டு போட முடியாது.
