“ஆட்சிக்கு வந்து 1 மாதம் கூட ஆகல.. அதுக்குள்ளே கட்டப்பஞ்சாயத்தா?”… ஒரு லட்ச ரூபாய் மாமுல்… தவெக ஒன்றிய செயலாளரின் பகிரங்க மிரட்டல்…!

Spread the love

தமிழகத்தில் “மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்கிற ஒற்றை முழக்கத்தோடு தேர்தலை எதிர்கொண்டு, பிரமாண்ட வெற்றியின் மூலம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. அதற்குள்ளாகவே, கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் சிலர் செய்யும் அத்துமீறல்களும் கட்டப்பஞ்சாயத்துகளும் தவெக ஆட்சிக்கு பெரும் அவதூறை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது பொதுமக்களிடையேயும், நடுநிலையாளர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் கனியம்பாடி பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் தவெக ஒன்றிய செயலாளர் ஒருவர், மாதம் ஒரு லட்சம் ரூபாய் ‘மாமுல்’ கேட்டு மிரட்டல் விடுத்திருக்கும் விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக இத்தொழிலைச் செய்து வரும் தங்களை, “மாதம் ஒரு லட்சம் பணம் தராவிட்டால் தொழிலை நடத்த விடமாட்டோம்” என்று அந்த நிர்வாகி மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பொறுப்பிற்கு வர தான் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும், மேலிடத்து உத்தரவின் பேரில்தான் இதைச் செய்வதாகவும் கூறி அவர் மிரட்டியதாகக் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் மட்டுமல்லாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தவெகவினர் இது போன்ற கட்டப்பஞ்சாயத்து மற்றும் மாமுல் வசூல் விவகாரங்களில் தொடர்ந்து சிக்கி வருவதாகப் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆட்சிப் பொறுப்பேற்று 30 நாட்கள் கூட ஆகாத சூழ்நிலையில், ஒரு சில நிர்வாகிகளின் இத்தகைய அராஜகப் போக்குகள், கட்சியின் பெயரைக் கெடுப்பதுடன் உழைக்கும் வர்க்கத்தினரிடையே தவெக அரசின் மீது கடும் அதிருப்தியையும், பயத்தையும் உருவாக்கத் தொடங்கியிருக்கிறது. மிரட்டலுக்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், காவல்துறை இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, ‘மாற்றம்’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அதைச் செயலில் காட்டும் முதலமைச்சராக விஜய் திகழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் இத்தகைய நபர்கள் மீது தவெக தலைமை எவ்வித சமரசமும் இன்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து மற்றும் மிரட்டல் கலாச்சாரத்தை ஆரம்பத்திலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டுமே, வணிகர்களும் பொதுமக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை இந்த ஆட்சியில் உருவாக்க முடியும்.

Nanthini

Recent Posts

“அடுத்த 24 மணி நேரத்தில் உலக வரைபடம் மாறப்போகிறதா?”… அமெரிக்கா – ஈரான் எடுத்த அந்த ஒற்றை முடிவு… திரைக்குப் பின்னால் நடந்த நள்ளிரவுப் பேச்சுவார்த்தை….!

உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…

3 minutes ago

“சிஎம் விஜய் போட்ட ரகசிய உத்தரவு”…. தமிழகத்தில் நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்… அதிர்ந்து போன அதிகாரிகள்…!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…

8 minutes ago

“என் மேல புகார் கொடுத்தவங்க லிஸ்ட் என்கிட்ட இருக்கு!”.. கார்த்தி சிதம்பரம் எம்பி பேசிய ஆடியோ லீக்… அலறும் அரசியல் களம்..!!

"கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நான் பேசியபோது எனக்கு…

10 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி… ஊழியர்களுக்கு அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…!

ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ்…

14 minutes ago

“ஃபைல்ஸ் எங்கே.. உடனே எடுங்க”… விஜய்யின் ‘ஆக்ஷன்’ லிஸ்டில் இருக்கும் அந்த 3 விஐபிக்கள் யார்?… கசிந்தது லஞ்ச ஒழிப்புத்துறை ரகசியம்…!

தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, கடந்த மே 10-ஆம் தேதி புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற…

18 minutes ago

“ஆட்சி நீடிக்குமா?”.. புதுச்சேரியில் பரபரப்பு கிளப்பிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.. ஆட்டம்காணும் அரசியல் களம்..!!!

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று புதுச்சேரிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர்…

21 minutes ago