தமிழகத்தில் நீட் தேர்வுக்கான மறுதேர்வு வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்குவதற்காக இன்று (மே 23) முதல் திறக்கப்படவுள்ளன. வரும் ஜூன் 11-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவிருக்கும் இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள், காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கோடைக்காலப் பயிற்சி நாள்களில், வகுப்புகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தடையின்றி செய்து தருவதோடு, அவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க மதிய உணவு மற்றும் காலை, மாலை சிற்றுண்டிகளையும் வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இந்த உடனடி மற்றும் முறையான வழிகாட்டுதல், மறுதேர்வுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க…
பணியாளர் தேர்வாணையம் (SSC), மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப்…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற…
ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக நிலைத்தன்மையின் அடையாளமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும்…
உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…