வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றிய செயலாளர், “எங்கள் ஆட்சி நடப்பதால் எங்களுக்கு மாதம் மாமூல் தர வேண்டும்” எனக் கூறி மிரட்டியதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் திரண்டு அந்தத் தவெக நிர்வாகிக்கு எதிராகப் புகார் அளித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, காவல் நிலைய வளாகத்திலேயே “யார் உன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டது?” எனச் சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகிக்கும், புகார் அளித்தவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்குள்ளேயே இரு தரப்பும் மோதிக்கொண்ட இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் காணொளி, தற்போது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து அந்தத் தவெக நிர்வாகி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கணியம்பாடி பகுதியில் சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் திருடப்படுவதைத் தான் தட்டிக்கேட்டுப் புகார் அளித்ததாகவும், அந்த ஆத்திரத்தில் தன் மீது தேவையில்லாமல் பணம் கேட்டு மிரட்டியதாகப் பழிவாங்கும் நோக்கில் பொய் புகார் கொடுத்துச் சித்தரித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த அபாண்டமான பழிச்சொல் குறித்துத் தான் மாவட்ட எஸ்பி (SP) அலுவலகத்தில் நேரில் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்…
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர், தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும்…
கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசை…
ஐபிஎல் 2026 தொடரில், பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 55 ரன்கள்…
நடிகை சோனா 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'ஷாஜகான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரௌடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகக் காவல் துறை…