சென்னை செம்மஞ்சேரியில் ஜேப்பியார் கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வந்த சுமார் 2,010 கோடி ரூபாய் மதிப்பிலான 91 ஏக்கருக்கும் அதிகமான ஆக்கிரமிப்பு நிலத்தை, கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு மீட்டெடுத்தது. இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில், அந்தப் பிரம்மாண்டமான இடத்தில் சர்வதேச தரத்திலான மாபெரும் விளையாட்டு நகரம் ஒன்றை அமைப்பதற்காக 2026 பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 112 ஏக்கர் பரப்பளவில் சுமார் 206 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்ட இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ‘ஆர்பிபி’ என்ற நிறுவனத்திற்கு முந்தைய அரசால் அதிகாரப்பூர்வமாகப் பணி ஆணையும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது அமைந்துள்ள தவெக அரசு இந்த விளையாட்டு நகரத் திட்டத்திற்கான பணி ஆணையைத் திடீரென ரத்து செய்துள்ளது. எவ்வித முறையான நிர்வாகக் காரணங்களும் வெளிப்படையாகக் குறிப்பிடப்படாமல், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் இளைஞர் மேம்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த மாபெரும் உள்கட்டமைப்புத் திட்டம், தற்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் பல மாதங்களாகத் நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், தற்போது மிகவும் கவலைக்கிடமான ஒரு…
மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…
தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…
தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பாமலேயே பாசனத்திற்காகத் தண்ணீர்…