அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலைமைக்கு எதிரான அவர்களுடன் தொடர்பில் இருந்த தாக ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதன் பிறகு செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார்.
இந்நிலையில் பாஜகவினர் தன்னை தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு அனுப்பியதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். ஒரு கட்சியின் தலைவரது கொள்கைதான் அனைத்து தொண்டனுக்கும். அது எனக்கும் பொருந்தும் என கூறிய அவர், பாஜகவுடன் இப்போது எனக்கு எந்த பேச்சு வார்த்தையும் இல்லை எந்த தொடர்பும் கிடையாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணிக்கு 100% வாய்ப்பே இல்லை என்றும் செங்கோட்டையன் உறுதிப்பட அறிவித்துள்ளார்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…