ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது ஆற்காடு நகரக் காவல்துறையினர் நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான விஜய் மோகன், அப்பெண்ணுக்கு மகளிர் அணியில் முக்கியப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஆபாசப் புகைப்படங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அந்தப் புகைப்படங்களை வைத்துத் தொடர்ந்து மிரட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பதவி ஆசை காட்டி தன்னை ஏமாற்றி ஆபாசப் படங்களைப் பெற்றதோடு, மாதவிடாய் காலத்திலும் விஜய் மோகன் கடுமையாக டார்ச்சர் செய்ததாகக் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய்யை ஒரு அண்ணனாக நினைத்து முறையிடுவதாகவும், தன் பாதுகாப்பை உறுதிசெய்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிய ஆற்காடு காவல்துறையினர், வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். புகார்தாரர் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பான புகாரை தவெக தேர்தல் மேலாண்மைப் பிரிவுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திலும் முறைப்படி அளித்துள்ளார்.
இச்சம்பவம் பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் தீவிர விவாதப் பொருளாக மாறிய நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் ஒழுங்குக்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகனைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் உடனடியாக நீக்கி கட்சித் தலைமை அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…