“கெத்து காட்டிய விஜய்…. மண்ணை கவ்விய அண்ணாமலை”…. கட்சி ஆரம்பிச்ச ஒரே மாசத்துல இப்படியா?… வெளியான பகீர் தகவல்…. தொண்டர்கள் ஷாக்….!

Spread the love

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகிய பிறகு ‘வீ தி லீடர்ஸ்’ என்ற இயக்கத்தைத் தொடங்கித் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். கரூரில் பிறந்து, ஐஐஎம் படிப்புக்குப் பின் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே மாநிலத் தலைவராகப் உயர்ந்தார். திமுக அரசின் நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு மற்றும் ஊழல் விவகாரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இருப்பினும், இவரது தீவிர அரசியலால் அதிமுக உடனான கூட்டணி முறிந்ததுடன், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது. தொடர்ந்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்ததால், தலைமை மீதான கருத்து வேறுபாட்டால் ஜூன் 5-ம் தேதி பாஜகவிலிருந்து விலகி புதிய இயக்கத்தைத் தொடங்கினார்.

இயக்கம் தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே 13 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்ததும், கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய பாஜக முன்னாள் நிர்வாகிகளும் தொண்டர்களும் இவருடன் கை கோர்த்ததும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பிறகே அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியை அறிவிப்பேன் என அண்ணாமலை இலக்கு நிர்ணயித்திருந்தார். வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றி தொலைபேசி எண் சரிபார்ப்பு மூலமே உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், கோவை மாநாட்டைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் நிகழ்வுகளை நடத்தி, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து நேரடிப் பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இருப்பினும், இயக்கம் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இதுவரை 19 லட்சத்து 34 ஆயிரத்து 777 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட 50 லட்சம் என்ற இலக்கில் பாதியைக்கூட இன்னும் எட்ட முடியாத நிலை நீடிக்கிறது. நடிகர் விஜயின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே உறுப்பினர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்ததாகக் கூறப்படும் சூழலில், இளைஞர்களிடம் அதிக செல்வாக்கு இருப்பதாகக் கருதப்பட்ட அண்ணாமலையின் இயக்கத்தில் 20 லட்சம் பேர்கூட இணையாதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தீவிரமாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை, தற்போது மந்தமடைந்திருப்பது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த உறுப்பினர் தட்டுப்பாட்டால் ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கம் எப்போது முழுமையான அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், வரும் நாட்களில் தனது பிரச்சார உத்திகளை மாற்றியமைத்து உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார்.

Nanthini

Recent Posts

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

4 minutes ago

அடகடவுளே..! இடித்து தள்ளிவிட்டு எஸ்கேப்!… உயிருக்கு போராடும் இளைஞர்… நிற்காமல் பறந்த ஃபார்ச்சூனர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…

11 minutes ago

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

19 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

27 minutes ago

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

1 மணத்தியாலம் ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

1 மணத்தியாலம் ago