2026-இல் முதல்வராக பதவியேற்கும் தலைவரே… நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுங்க… ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!!

By Soundarya on ஆடி 28, 2025

Spread the love

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முதல் மாநாட்டை விஜய் வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் விஜய் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று TVK  கட்சியினர் போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 2026 மக்கள் விரும்பும் முதல்வராக பதவியேற்கும் எங்கள் தமிழக வெற்றி கழக வெற்றி தலைவர் விஜய் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வரவேற்கிறோம். நமது கழகத்தின்  வெற்றிவாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரியில் இருந்து ஆரம்பம் ஆகட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.