தவெக கட்சி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்… மூத்த பத்திரிக்கையாளர் பரபரப்பு கருத்து…!!

By Soundarya on கார்த்திகை 20, 2025

Spread the love
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற வாய்ப்பில்லை  என மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, ” விஜய் கட்சி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும். முதலமைச்சர் ஆவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியமாகும்.
விஜய் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களோ, பிரபலமான நிர்வாகிகளோ யாரையுமே இல்லை. ஒரு கட்சியில் ஒருவர் மட்டும் பிரபலமாக இருந்தால் போதாது. நடிகர் விஜய்காந்த், கமல் தோல்வி அடைந்தது இந்த ஒரு காரணத்தினால் தான்” என தெரிவித்துள்ளார்.