2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சியினர் தீவிரமாக இறங்கி வேலை செய்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தன்னுடைய சமூக ஊடக பிரிவான ஐடி விங் அமைப்பில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மாநில முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
— TVK Party HQ (@TVKPartyHQ) July 19, 2025
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு செயலாளர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் 10 இணை ஒருங்கிணைப்பாளர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் வி.சிவா, என்.தணிகாசலம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். புதிய பொறுப்பாளர்கள் இனி சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் நடிகர் தலைவர் விஜயின் அரசியல் சிந்தனைகளை பரப்புவதில் தீவிரமாக செயல்பட இருக்கிறார்கள்.
