உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பள்ளி வேன் ஓட்டுனர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஜூலை 17ஆம் தேதி அன்று தந்தை ஒருவர் தன்னுடைய நான்கு வயது மகள் பள்ளி வேனில் செல்லும் பொழுது வேன் ஓட்டுநர் முகமது ஆரிப் என்பவர் தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை விசாரிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் தாயார் கூறுகையில், பள்ளிக்கு சென்று விட்டு வந்த என்னுடைய குழந்தை அம்மா டிரைவர் அங்கிள் அப்படி செய்தார் என்றும், அந்தரங்க உறுப்பில் வலிப்பதாகவும் கூறினார்.
பரிசோதனை செய்ததில் அவளுக்கு அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தேன். இதுகுறித்து நான் பள்ளி முதல்வரிடம் புகார் செய்தேன். ஆனால் அவர் அதை பற்றி பேசுவதாக கூறினார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்ற போது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக ஆகி உள்ளதாக மருத்துவர் கூறினார்கள். நாங்கள் இரண்டு நாட்கள் காத்திருந்தோம். ஆனால் பள்ளி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஓட்டுனர் மீண்டும் அழைத்தார். நாங்கள் மறுத்தபோது நீங்கள் போலீசில் புகார் செய்தால், உங்கள் குழந்தையை காணாமல் போகச் செய்வேன் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
