தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று நீதிமன்றம் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டது. அதே சமயம் தமிழக வெற்றிக்கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் நாமக்கல் தமிழக வெற்றிக்கழகம் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் பரப்புரையின் போது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய வழக்கில் நேற்று ஹைகோர்ட் அவரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து கைதுக்கு பயந்து தப்பி ஓட்டம் பிடித்து அவரை பிடிக்க இரண்டு தலைப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
