BREAKING: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் கைதா?…. அடுத்தடுத்து பாயும் DVAC… இன்று வெளியாகும் அந்த ‘வெள்ளை அறிக்கை’….!

By Nanthini on ஆனி 25, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரும் ஒப்பந்ததாரருமான எம்.சி.சங்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரைக் கைது செய்ய கரூர் போலீஸார் தீவிர முயற்சி எடுத்த நிலையில், இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இன்று மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியாகவுள்ளதால், அதில் இடம்பெறும் முக்கியத் தரவுகளின் அடிப்படையில் மின்துறை ஊழல் வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி மீண்டும் கைது செய்யப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.