பெரும் பரபரப்பு..! வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தவெக MLA… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!

By Soundarya on வைகாசி 6, 2026

Spread the love

சென்னை ராயபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ விஜய் தாமு தனது பிறந்தநாளை முன்னிட்டு வாளால் கேக் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக நிர்வாகி லயோலா மணி தடுத்தும் அதைக் கேட்காமல், தொண்டர்கள் சூழ விஜய் தாமு ஆக்ரோஷமாக வாளைப் பயன்படுத்தி கேக் வெட்டி மகிழ்ந்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக மாறியுள்ள நிலையில், சட்டத்திற்குப் புறம்பான வகையில் பொதுவெளியில் வாளைப் பயன்படுத்தி இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வேகமாகப் பரவி வரும் நிலையில், கட்சித் தலைமை இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.