தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தொடரில், துறை சார்ந்த அமைச்சர்கள் தங்களுக்குரிய கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், மற்ற அமைச்சர்கள் மாறி மாறிப் பதிலளித்த வினோத நிகழ்வு பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உள்துறை அமைச்சர் சி.எம்.விஜய், சமூகநலன் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் ஆகியோர் தங்களது துறைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முன்வரவில்லை.
மாறாக, அவர்களுக்குப் பதிலாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தலையிட்டுப் பதிலளித்தனர். அவையின் மரபுகளைத் தாண்டி, துறைகளுக்குச் சற்றும் சம்மந்தமில்லாத அமைச்சர்கள் இவ்வாறு பொறுப்பேற்றுப் பேசியது அங்கிருந்த உறுப்பினர்களிடையே ஆச்சரியத்தையும், அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
