‘ஜனநாயகன்’ பார்த்து அழுத தவெக அமைச்சர்…! கலாய்த்துத் தள்ளிய ப்ளூ சட்டை மாறன்… சோசியல் மீடியாவில் வெடித்த புதிய சர்ச்சை…!!

By Devi Ramu on ஆடி 23, 2026

Spread the love

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக அமைச்சர் ஃபர்வேஸ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்யின் அறிமுகக் காட்சியைக் கண்டு அவர் உணர்ச்சிவசப்பட்டு கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோவைக் குறிப்பிட்ட சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “இப்போ இதைப் பார்த்து நாங்களும் அழுகணுமா?” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த நக்கலான பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு ரசிகரின் உணர்ச்சியை இப்படி கேலி செய்யலாமா என்று விஜய் ரசிகர்கள் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், சட்டசபையில் நடப்பது போன்ற காட்சிகளும் அரசைக் கிண்டல் செய்யும் சைகைகளும் படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் சர்ச்சைகள் எழுந்துள்ள சூழலில், பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் சினிமா படத்தைப் பார்த்து அழுவது தேவையா என்று எதிர்த்தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.