தவெக-வில் இருந்து அடுத்த தாவலா?…. CTR நிர்மல் குமாருக்கு திமுக வைத்த செக்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on ஆவணி 15, 2026

Spread the love

திமுக மற்றும் பாஜக இடையே நேரடி கூட்டணி நிலவுவதாக CTR நிர்மல் குமார் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அமைப்பின் செயலாளரான RS பாரதி தீவிர விமர்சனங்களை வைத்துள்ளார். பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பயணித்துவிட்டு தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் CTR நிர்மல் குமார், எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அல்லது அண்ணாமலை புதிய கட்சி தொடங்கினால் கூட அவற்றில் சென்று இணைவார் என எள்ளி நகையாடியுள்ளார். மேலும், அவர் இன்னும் எத்தனை கட்சிகளுக்குத்தான் மாறுவார் என்றே தெரியவில்லை எனக் கடுமையாக சாடியுள்ள RS பாரதி, நிர்மல் குமாரின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்து இந்த பதிலை அளித்துள்ளார்.