தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.1,000 உரிமைத் தொகையானது 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யவும் மாதந்தோறும் வழங்கப்படும் இந்த நிதியுதவி, இம்மாதத்திலும் தடையின்றி மகளிரை சென்றடைந்துள்ளது.
அதேவேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், “மகளிர் உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்படும்” என தவெக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான உரிமைத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
