“விஜய்க்காக களமிறங்கிய தந்தை”…. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு… காங்கிரஸுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த அதிரடி ‘ஆஃபர்…!

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்வைத்துள்ள ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அதிகாரம் கிடைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக ஏதோ ஒரு பெரிய கட்சிக்கு ஆதரவு அளித்தே தேய்ந்து வருவதாக எஸ்.ஏ.சந்திரசேகர் விமர்சித்துள்ளார். ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட பெருமை மிக்க காங்கிரஸ் கட்சிக்கு இன்று அதிகாரம் இல்லாததே அதன் பின்னடைவுக்குக் காரணம் என்றும், தவெகவுடன் இணைந்தால் அந்தப் பழைய பெருமையை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய்யுடன் கரம் கோர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய அரசியல் வாழ்வைத் தரும் என்பது அவரது கருத்தாக உள்ளது.

திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி வடிவம் பெறாத சூழலில், எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ஒரு சில நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் திமுக கூட்டணியில் தொடரவே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தவெக தனித்துப் போட்டியிடும் சூழல் நிலவுவதை உணர்ந்து, தன் மகன் விஜய்க்காக எஸ்சிஏ தூது விடுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எனினும், எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்தத் தலையீடு காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் கூட்டணியை முடிவு செய்ய அவர் முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் நிலையில், விஜய்யின் அரசியல் நகர்வுகளில் அவரது தந்தை இவ்வாறு கருத்து தெரிவிப்பது தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Nanthini

Recent Posts

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

49 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

54 minutes ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

1 மணத்தியாலம் ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

1 மணத்தியாலம் ago