விஜய் அடுத்த அதிரடி முடிவு.. ஆட்டம் காணும் திமுக.. பக்காவாக காய் நகர்த்தும் தளபதி…!

By Nanthini on ஆடி 15, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க மறுப்பக்கம் அதிமுக ஆட்சி இந்த முறை கட்டாயமாக தமிழகத்தில் அமையும் என்று இபிஎஸ் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர்களுக்கு இடையே விஜய் தமிழக மக்களுக்கு புதிய ஆட்சியை தரப்போகிறேன் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பயணித்துக் கொண்டிருக்கும் விஜய் இதுவரை யாருடன் கூட்டணி என்று அறிவிக்கவில்லை. திமுக, அதிமுக மற்றும் பாஜகவுடன் கட்டாயம் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று மட்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இப்படியான நிலையில் திமுகவை எதிர்த்து தீவிரமாக களமிறங்கி வரும் விஜய் நிலையில் திமுகவின் 50 சதவீதம் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கு குட் பை சொல்லிவிட்டு அதிமுக தங்களுடன் வந்தாலும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜயின் நகர்வு திமுக மற்றும் அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.