திடீர் திருப்பம்… 2026-ல் விஜய் போட்டியிட போகும் முக்கிய தொகுதி… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜயின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் V என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என விஜய்யின் குடும்ப ஜோதிடர் கூறியுள்ளாராம். இதனால் அந்த எழுத்தில் தொடங்கும் ஒன்பது தொகுதிகளில் ரகசிய சர்வே எடுக்கப்பட்டு வருவதாக தமிழக வெற்றி கழகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. V என்ற எழுத்தில் வில்லிவாக்கம், விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருதாச்சலம், வீரபாண்டி, விராலிமலை, விருதுநகர், விளாத்திகுளம், விலவங்கோடு ஆகிய தொகுதிகள் உள்ளன. இதில் ஏதாவது ஒரு தொகுதியில் தான் விஜய் போட்டியிட உள்ளது உறுதியாகி உள்ளது.