கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றமும் விஜய்க்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்தது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து கரூர் விவகாரம் தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரூர் துயர வழக்கில் சிறையில் உள்ள TVK நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கு ஜாமின் கிடைத்துள்ளது. கரூர் நீதிமன்ற வளாகத்தில் TVK நிர்வாகிகள் மற்றும் மதியழகன் குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். செப்டம்பர் 30ஆம் தேதி முதல் சிறையில் உள்ள இருவரும் இன்று வெளியே வர உள்ளனர். இதனிடையே பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் TVK வழக்கறிஞர் சீனிவாசன் உடன் செல்போனில் பேசியுள்ளார். முன்னதாக SC வழக்கிலும் TVK வெற்றி பெற்று இருந்தது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…