5 மாவட்டங்கள்.. 30 தொகுதிகள்.. நீலாங்கரையில் நடக்கப்போகும் தரமான சம்பவம்… மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. மாஸ் காட்டப்போகும் முதல்வர் விஜய்….!

By Nanthini on கார்த்திகை 4, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ – மாணவிகளுக்கு விருதுகளும் ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, சிறப்பாகப் பயின்ற மாணவச் செல்வங்களை நேரில் அழைத்துச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டுவது தவெக-வின் முக்கிய நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

நடப்பாண்டில் தேர்வு முடிவுகள் வெளியாகி சில காலம் வரை விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்ததால், பல்வேறு தரப்பினரிடையே கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், மாணவச் செல்வங்களைக் கௌரவிக்கும் பொருட்டு நடப்பாண்டிற்கான விருது வழங்கும் விழாவின் முதற்கட்ட நிகழ்வு இன்று (04.11.2026, புதன்கிழமை) சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

   

இவ்விழா தொடர்பாக தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 30 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று காலை 11.00 மணி முதல் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அரங்குள் அனுமதிக்கப்பட்டுச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் என்றும், தொடர்ந்து அவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

எதிர்காலச் சமுதாயம் வளமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் உருவாக வேண்டும் என்பதில் தவெக தலைவர் விஜய் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று மதியம் 2.00 மணியளவில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்வில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு, பெற்றோர்களின் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்குச் சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கி வாழ்த்தி கௌரவிக்க உள்ளார்.