பீவாண்டி அருகே மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சோனாலே பகுதியில் அமைந்துள்ள ஒரு விடுதியில் நள்ளிரவில் பாட்டு மாற்றுவது தொடர்பான மோதல் பெரும் வன்முறையாக மாறியது. இரு பிரிவினருக்கு இடையே பாட்டு வைப்பது குறித்து ஏற்பட்ட லேசான வாக்குவாதம், சிறிது நேரத்திலேயே கைகலப்பாக உருவெடுத்து கடுமையான தாக்குதலாக உருவெடுத்தது.
இந்த மோதலின் போது வன்முறை உச்சத்தை எட்டியது. ஒரு தரப்பினர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், எதிர்த்தரப்பினர் ‘சாப்பர்’ எனப்படும் கத்தியைக் கொண்டு வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த திடுக்கிடும் சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் பீதியில் ஆழ்த்தியது.
https://twitter.com/nextminutenews7/status/2117595726267965867/video/1
இந்த பயங்கரமான தாக்குதல் மற்றும் அங்கு நடந்த வன்முறை சம்பவங்கள் முழுவதும் அந்த விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
