Sweet Uncle… Watchlist-ல் Add பண்ணிக்கோங்க… வெப் சீரிஸ் பெயர்களை வைத்து… ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தவெக ஐடி விங்… இணையத்தில் வைரல்…!

Spread the love

தேனியில் 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகள் தொடர்பாக திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ‘Breaking Bad’, ‘Prison Break’ போன்ற பிரபல ஆங்கில வெப் சீரிஸ் பெயர்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தரப்பிலிருந்து சமூக வலைதளங்களில் நகைச்சுவையான மற்றும் கடுமையான விமர்சனப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஸ்டாலினின் பதிவை கேலி செய்யும் வகையில் தவெக வெளியிட்ட பதிவில், “நார் கோஸ், மணி ஹெய்ஸ்ட், ஸ்கேம் போன்ற பல ஆங்கில வெப் சீரிஸ்களுக்கே திமுகவின் ஆட்சி லட்சணம்தான் இன்ஸ்பிரேஷன்” என்று சாடியுள்ளது. மேலும் சர்க்கரை ஊழல் முதல் பள்ளி ஊழல் வரை திமுகவின் ஊழல் வரலாறுகள்தான் அத்தகைய தொடர்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்ததாகவும், ‘Sweet Uncle’ என்று ஸ்டாலினை கிண்டல் செய்து தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.

மேலும் அந்தப் பதிவில், விரைவில் வெளியாகவுள்ள ‘2ஜி ஃபைல்ஸ்’, ‘கேபிள் க்ரானிக்கிள்ஸ்’, ‘டாய்லெட் ஸ்கேம்’, ‘எக்ஸ்டார்ஷன் கேம்’ போன்ற தலைப்புகளைக் குறிப்பிட்டு, இவை அனைத்துமே திமுகவின் வரலாற்றைச் சொல்லும் கன்டென்ட்கள் எனவும், இவற்றை உங்களது வாட்ச்லிஸ்ட்டில் சேர்த்து கண்டு மகிழுங்கள் என்றும் ஸ்டாலினை தவெக விமர்சித்துள்ளது. இவ்வாறு திமுகவின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் தவெக ஐடி விங் தரப்பு உடனுக்குடன் காட்டமான பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

52 seconds ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

3 minutes ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

10 minutes ago

இதோ ஆதாரம்!… “என் கார் மேலயே இடிப்பியா?”… டேஷ்கேம் செய்த மேஜிக்… அபாண்டப் பழி… தப்பு பண்ணிட்டு சீன் போட்ட டிரைவர்…!!

தலைநகர் டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்து, கவனக்குறைவான ஓட்டுதலால் ஏற்படும் ஆபத்தை வெளிச்சம்…

15 minutes ago

திக்… திக்… திக்… விபத்தை ஏற்படுத்திய போதை இளைஞர்கள்?… பூங்காவிற்குச் சென்ற தாய்-மகள் மீது ஏறிச் சென்ற கார்… ஹரியானாவில் நடந்த கொடூர சம்பவம்…!

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள ஜாட் பவன் அருகே அமைந்திருக்கும் தேவிலால் பூங்காவிற்குத் தாயும் மகளும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது…

20 minutes ago