சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த ஊரான சிவகங்கையில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்துக் கவலை தெரிவித்தார். தன்னை தேர்தலில் தோற்கடித்துவிட்டு இப்போது அங்கே குற்றங்கள் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தன் சொந்த ஊருக்குள் வர வேண்டிய சூழலில் தனக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருப்பதாக ஓப்பனாகத் தெரிவித்தார்.
அன்பில் மகேஷ் கைது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், கடந்த ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது என்றும், முறையான மற்றும் சரியான நடவடிக்கை எடுக்கப்படும்போது அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் கூறினார். மேலும், தவெக அரசு மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்கால ஆய்வுகள் குறித்தும் தனது கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்தார்.
தேர்தல் வாக்குறுதிகளாகவும் நலத்திட்டங்களாகவும் வழங்கப்படும் பண உதவி, தாலிக்கு தங்கம், சிலிண்டர் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்துக்கான உதவித்தொகை போன்றவற்றைச் சுட்டிக்காட்டிய சீமான், மக்கள் பணத்தில் இருந்து வழங்குவதை ‘அன்பளிப்பு’ என்று கூற முடியாது என்றார். இதனை நேரடிப் பணப் பரிமாற்றம் மட்டுமின்றி வாக்குறுதிகளால் செய்யப்படுவதைக் குறிக்கும் வகையில் “வார்த்தை லஞ்சம்” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார், ஸ்கூட்டர் மீது பலமாக…
சீனாவைச் சேர்ந்த ZX Moto வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஷாங் ஷு, தண்ணீரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி புதிய…
சாலைகளில் நாம் காட்டும் அவசரமும் அதீத வேகமும் விபத்துகளுக்கு முதன்மையான அழைப்பாக அமைகின்றன. சந்திப்புகளையோ அல்லது பிற வாகனங்கள் இணையும்…
1911-ஆம் ஆண்டு பிறந்த பாபா வங்கா, சிறுவயதில் பார்வையை இழந்த பிறகு எதிர்காலத்தைக் கணிக்கும் விசேஷ ஆற்றலைப் பெற்றதாக நம்பப்படுகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சிக்னல் விதியை முறையாகப் பின்பற்றிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆதவ், யாரையும் பழிவாங்கும் நோக்கம் தங்களுக்குக் கிடையாது என்றும், 1977-க்குப் பிறகு மக்கள்…