Sweet Uncle… Watchlist-ல் Add பண்ணிக்கோங்க… வெப் சீரிஸ் பெயர்களை வைத்து… ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தவெக ஐடி விங்… இணையத்தில் வைரல்…!

By Swetha on ஐப்பசி 27, 2026

Spread the love

தேனியில் 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகள் தொடர்பாக திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ‘Breaking Bad’, ‘Prison Break’ போன்ற பிரபல ஆங்கில வெப் சீரிஸ் பெயர்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தரப்பிலிருந்து சமூக வலைதளங்களில் நகைச்சுவையான மற்றும் கடுமையான விமர்சனப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஸ்டாலினின் பதிவை கேலி செய்யும் வகையில் தவெக வெளியிட்ட பதிவில், “நார் கோஸ், மணி ஹெய்ஸ்ட், ஸ்கேம் போன்ற பல ஆங்கில வெப் சீரிஸ்களுக்கே திமுகவின் ஆட்சி லட்சணம்தான் இன்ஸ்பிரேஷன்” என்று சாடியுள்ளது. மேலும் சர்க்கரை ஊழல் முதல் பள்ளி ஊழல் வரை திமுகவின் ஊழல் வரலாறுகள்தான் அத்தகைய தொடர்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்ததாகவும், ‘Sweet Uncle’ என்று ஸ்டாலினை கிண்டல் செய்து தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.

   

மேலும் அந்தப் பதிவில், விரைவில் வெளியாகவுள்ள ‘2ஜி ஃபைல்ஸ்’, ‘கேபிள் க்ரானிக்கிள்ஸ்’, ‘டாய்லெட் ஸ்கேம்’, ‘எக்ஸ்டார்ஷன் கேம்’ போன்ற தலைப்புகளைக் குறிப்பிட்டு, இவை அனைத்துமே திமுகவின் வரலாற்றைச் சொல்லும் கன்டென்ட்கள் எனவும், இவற்றை உங்களது வாட்ச்லிஸ்ட்டில் சேர்த்து கண்டு மகிழுங்கள் என்றும் ஸ்டாலினை தவெக விமர்சித்துள்ளது. இவ்வாறு திமுகவின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் தவெக ஐடி விங் தரப்பு உடனுக்குடன் காட்டமான பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.