தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் ‘ஸ்லீப்பர் செல்’லாக செயல்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி கடுமையாகச் சாடியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் எதிர்பார்த்த நல்ல மாற்றத்திற்கு மாறாக, எதிர்மறையான சூழலையே தவெக தலைவர் விஜய் வழங்கி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், மாநிலத்தில் மின்கட்டணம் தொடங்கி அத்தியாவசியப் பொருளான அரிசி வரை அனைத்துப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் கொடுமையான சர்வாதிகாரப் போக்காக உருவெடுத்துள்ளது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
