BREAKING: பாஜக கூட்டணியில் தவெக… சற்றுமுன் அமைச்சர் பரபரப்பு… ஷாக்கில் அரசியல் வட்டாரம்….!

By Nanthini on ஆடி 17, 2026

Spread the love

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவுடன் முதலமைச்சர் விஜய் கூட்டணி அமைப்பார் என்று நான் எதிர்பார்த்தேன்.

ஆனால், அவர் மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று தற்பொழுது ஆட்சி அமைத்துவிட்டார்” என்று தனது அரசியல் கணிப்பைப் பகிர்ந்துகொண்டார். பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தச் சந்திப்பு, முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமாக மட்டுமே அமைந்ததாக அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.