தவெக அரசை கவிழ்க்க சதி… ராஜேஷ் லக்கானிக்கு தலைமைச் செயலாளர் ஆஃபர்?…. செந்தில் பாலாஜியை தூக்க விஜய் போட்ட சீக்ரெட் பிளான்…!

By Nanthini on ஆடி 22, 2026

Spread the love

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் திமுகவில் இணைந்தவர் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டத்தில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இவர், தேர்தல் வெற்றிகளுக்கு முக்கியக் காரணியாக இருப்பார் என்பதால் திமுக இவரை அரவணைத்துக் கொண்டது. ஆனால், தற்போது தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள சூழலில், மாநில அரசின் முதன்மை இலக்காக செந்தில் பாலாஜி மாறியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே கரூர் விவகாரங்களில் தவெகவினர் இவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தவெக ஆட்சியை வீழ்த்த எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாக எழும் புகார்களிலும் இவரது பெயர் பலமாக அடிபடுகிறது.

இவரை எந்த வழியிலாவது கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வந்தாலும், செந்தில் பாலாஜி நீதிமன்றம் மூலம் முன்ஜாமீன் பெற்று கைதில் இருந்து தப்பித்து வருகிறார். அதேவேளையில், காவல்துறை அனுப்பிய சம்மன்களுக்கு ஆஜராகாமல் அவர் தொடர்ந்து தாமதம் செய்து வருவதும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த முட்டுக்கட்டையை உடைக்க, தவெக அரசு புதிய வியூகம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராகச் செயல்பட்ட காலத்தில், அத்துறையின் செயலாளராக இருந்த ராஜேஷ் லக்கானியை மீண்டும் முக்கியப் பொறுப்புக்கு கொண்டுவந்து அரசாங்கம் காய்களை நகர்த்தி வருகிறது.

   

மின்சாரத் துறையில் நடைபெற்ற டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் முழு பின்னணியும் ராஜேஷ் லக்கானிக்கு நன்கு தெரியும் என்பதால், அவரிடமிருந்து ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களைத் திரட்டி வலுவான வழக்கை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கிற்கு முழுமையாக ஒத்துழைத்தால், அவருக்குத் ‘தலைமைச் செயலாளர்’ பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இதனால், சட்டரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வரும் செந்தில் பாலாஜிக்கு, வரும் நாட்களில் அடுத்தடுத்து கடும் நெருக்கடிகளும் சிக்கல்களும் காத்திருப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.